சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா... காவல்நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா... காவல்நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

காவல்நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

பல்லாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து சக காவல் துறையினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் தீனதயாளன் என்பவருக்கு சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

  இதனை அடுத்து அவருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவல் துறையினர் இடையே அச்சம் ஏற்பட்டது.

  இதனை அடுத்து பல்லாவரம் கன்டோன்மென்ட் அலுவலகத்தில் இருந்து வந்த துப்புரவு பணியாளர்கள் பல்லாவரம் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

  கொரோனா தொற்று ஏற்பட்ட தீனதயாளனை தனிமைப்படுத்தி அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  பல்லாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து சக காவல் துறையினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பல்லாவரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: