Corona Virus: சீனாவிலிருக்கும் தன் நாட்டின் குடிமக்களைக் கண்டுகொள்ளாத பாகிஸ்தான்!

அவர்கள் அனைவரும் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Corona Virus: சீனாவிலிருக்கும் தன் நாட்டின் குடிமக்களைக் கண்டுகொள்ளாத பாகிஸ்தான்!
இம்ரான் கான்
  • Share this:
சீனாவின் ஊஹான் பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை மீட்க அந்நாட்டு அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று பாகிஸ்தானியர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 10,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

அதனையடுத்து, சீனாவின் ஊஹான் பகுதியில் வசித்து வந்த 300-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. சீனாவிலிருந்து இந்திய மாணவர்கள் இரண்டு கட்டங்களாக ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தனர். இந்தியாவைச் சேர்ந்த 323 மாணவர்களும் மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரும் அதில் அடக்கம்.




அவர்கள் அனைவரும் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சீனாவின் ஊஹான் பகுதியில் வாழும் பாகிஸ்தானியர்களை மீட்க அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்நாட்டினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.


சீனாவுடன் துணை நிற்கும் விதமாக ஊஹான் பகுதியிலிருந்து பாகிஸ்தானியர்களை திரும்ப அழைக்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை பாகிஸ்தானியர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துவருகின்றனர். தங்களை சீனாவிலிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று ட்விட்டர் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கைவைத்து வருகின்றனர்.

Also see:

First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading