நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு - கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ள இம்ரான் கான் அறிவுறுத்தல்

கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு - கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ள இம்ரான் கான் அறிவுறுத்தல்
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: June 3, 2020, 8:36 AM IST
  • Share this:
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒரே நாளில் 3,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76,398 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 1,621 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், கொரோனா பேரழிவை ஏற்படுத்தும் தொற்றாக உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனா வைரஸ் போகாது. நாம் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் சுகாதார நிறுவனங்கள் கூறக்கூடிய முன்னெச்சரிக்கை விஷயங்களை பின்பற்றினால், கொரோனாவில் இருந்து தற்காத்துகொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, லாகூர் நகரத்தில் சுமார் 6 லட்சம் பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று பஞ்சாப் மாகாண அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Also See: சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்


First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading