பாகிஸ்தானுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்... நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து வரும் அத்தனைப் பயணிகளையும் தனியாகப் பிரித்து மருத்துவ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்... நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு அறிவிப்பு!
மாதிரிப்படம்
  • Share this:
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா தாக்குதல் குறித்து அந்நாட்டுப் பிரதமரின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார சிறப்பு உதவியாளர் ஜஃபர் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பாகிஸ்தானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ விதிமுறைகளின் அடிப்படையில் இருவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரது உடல்நிலையும் ஸ்திரமாகவே உள்ளது” என்றுள்ளார்.

மேலும் மிஸ்ரா குறிப்பிடுகையில், “கொரோனா தாக்குதல் குறித்து பயப்படத் தேவையில்லை. பாகிஸ்தானுக்குள் நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் பயணத்தை நிறைவு செய்து பாகிஸ்தானுக்குத் திரும்பிய 22 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து ஈரானில் இருந்து வரும் அத்தனை பயணிகளையும் தனியாகப் பிரித்து மருத்துவ சோதனை நடந்து வருகிறது. ஆஃப்கானிஸ்தான் நாட்டிலும் வைரஸ் தாக்குதல் உறுதி ஆகியுள்ளதால் அந்நாட்டிலிருந்து திரும்பும் பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

மேலும் பார்க்க: கொரோனா வைரஸ் தாக்கம்: இத்தாலி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் தொடரும் மரணங்கள்!
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading