கொரோனா: ஏன் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தேவை? சரியானதை தேர்தெடுப்பது எப்படி?

ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்

ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒருமுறை தீர்ந்துவிட்டால், அதனை நிரப்புவதற்கு மீண்டும் எடுத்துச்செல்ல வேண்டும். ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை பொறுத்தவரையில் மின்சாரம் இருக்கும் வரை சுற்றுப்புற காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து கொடுக்கும்.

  • Share this:
கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியாவில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் கருவிகளின் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சார்ஸ் கோவிட் 2 வைரஸால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் போதிய படுக்கை வசதி இல்லாததால், சாலைகளிலேயே வாகனங்களில் இருந்தவாறு உயிரிழந்து வருகின்றனர். இந்த பிரச்சனை மற்ற மாநிலங்களும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், சந்தையில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் தாங்களாகவே ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்கி வருகின்றனர். சந்தையில் பல வகை ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் இருப்பதால், எந்த வகையை தேர்தெடுப்பது என்பதில் மக்களிடையே குழப்பம் உள்ளது. சரியான விலையில் தரமான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்க விரும்பினால், இங்கே கொடுக்கப்படும் வழிமுறைகளை சாய்ஸாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏன் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தேவை?

ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒருமுறை தீர்ந்துவிட்டால், அதனை நிரப்புவதற்கு மீண்டும் எடுத்துச்செல்ல வேண்டும். ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை பொறுத்தவரையில் மின்சாரம் இருக்கும் வரை சுற்றுப்புற காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து கொடுக்கும். இந்த காற்று ஏறத்தாழ 95 விழுக்காடு மட்டுமே தூய்மையாக இருக்கும் என்றாலும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போதுமானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், ஐ.சி.யூவில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை பயன்படுத்தக்கூடாது.

வாங்கும்முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு வழிகளிலும் கிடைப்பது எளிதாக இல்லை. 1mg, Nightingales India, Healthklin மற்றும் Healthgenie போன்ற இணையதளங்கள் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. மிகவும் அறியப்படாத வெப்சைட்கள், நிபுலைசர்கள் மற்றும் ஹூயூமிடிபையர்ஸ் (ஈரப்பதமூட்டிகள்) போன்ற கருவிகளை தவறாக ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் என அதிகவிலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் போலி நபர்களின் வலையில் விழுந்துவிட வேண்டாம்.

2. வாடிக்கையாளர்கள் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை ஆர்டர் செய்வதற்கு முன்னர் தரமான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை கொடுக்கும் Equinox, Oxlife, nogen, Aspen, OCM, மற்றும் Yuwell பிராண்டுகளா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

3. தரமான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை நீங்கள் வாங்கினாலும் ஆக்சிஜன் ஃபுளோவை நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். நோயாளிக்கு ஏற்ப ஆக்சிஜன் தேவை மாறுபடும். அதனால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தேவையான ஃப்ளோவை (Flow) கொடுக்கும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்கிக்கொள்ளவும். ஆக்சிஜன் ஃப்ளோவுக்கு ஏற்ப ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களின் விலை மாறுபடும்.

4. ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களின் பேட்டரி அல்லது மின்சார நுகர்வு குறித்து தெரிந்திருக்க வேண்டும். மிக குறைவான மின்சார நுகர்வை மட்டும் எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் ஆக்சிஜன் அளவை நோயாளிக்கு கொடுக்க முடியாமல் போகலாம். மிக முக்கியமாக மின்சாரம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு இயங்கக்கூடிய கான்சன்டிரேட்டர்களாக இருப்பது நல்லது.

5. புதிய ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை வாங்கும்போது, எவ்வளவு தூய்மையான ஆக்சிஜனை, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கொடுக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். 99 விழுக்காடு தூய்மையான ஆக்சிஜனை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், ஆபத்து காலங்களில் 95 விழுக்காடு வரை தூய்மையாக இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பெரும்பாலான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் 87 முதல் 99 விழுக்காடு தூய்மையான ஆக்சிஜனை கொடுப்பதாக விளம்பரப்படுத்துகின்றனர். நிபுணர்களின் ஆலோசனைப்படி, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை தேர்ந்தெடுப்பது நல்லது. போர்ட்டபிள் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் அதிக அளவு ப்ளோவை கொடுப்பதில்லை.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: