• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Oxygen Auto : சென்னையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆட்டோ மூலம் உயிர் கொடுத்து வரும் சீதாலட்சுமி

Oxygen Auto : சென்னையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆட்டோ மூலம் உயிர் கொடுத்து வரும் சீதாலட்சுமி

ஆக்சிஜன் ஆட்டோ சீதாலட்சுமி

ஆக்சிஜன் ஆட்டோ சீதாலட்சுமி

ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆட்டோ மூலம் உயிர் கொடுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த பெண்மணி சீதாலட்சுமி.

  • Share this:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாசலில் நிற்கிறது இந்த நீலநிற ஆட்டோ. ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கிறார் கொடுங்கையூரைச் சேர்ந்த சீதாலட்சுமி.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம், ஐஐடி,ராயப்பேட்டை கொரோனா மையங்களுக்கு நோயாளிகளை கொண்டு செல்கிறார். ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு நிலவுவதால் இவர் ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார்.

கட்டணம் இல்லாமல் இலவசமாக ஆக்சிஜன் கொடுத்து நோயாளிகளை காப்பாற்றி வருகிறார் சீதாலட்சுமி. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் இவரிடம் கேட்ட போது, இவரது தாயார் கடந்த மாதம் கொரோனாவால் மருத்துவமனைக்கு வந்து ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்ததாக கூறுகிறார்.

இதையடுத்து தனது அம்மாவின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் பலருக்கும் தனது ஆட்டோவில் அழைத்து வந்து ஆக்சிஜன் கொடுத்து உயிர் கொடுத்து வருவதாக கூறுகிறார்.

தினமும் ஆட்டோவுக்கான டீசல், ஆக்சிஜன் சிலிண்டர் பாதுகாப்பு கவச உடை ஆகியவற்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்வதாக கூறுகிறார். நாளொன்றுக்கு 25 நோயாளிகள் வீதம் இதுவரையிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இதயம் துடிக்க சுவாசப் பைகளுக்கு ஆக்சிஜன் நிரப்பி வருகிறார்.

Must Read : லாக்டவுனால் பட்டினி - தெரு நாய்கள் மற்றும் விலங்குகளின் பசிபோக்கும் தன்னார்வலர்கள்

 

இறந்து போன அம்மாவின் இறுதி மூச்சு ஆட்டோ முழுக்க நிரம்பி நிற்கிறது....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: