ஆக்ஸ்போர்டு பல்கலையின் கொரோனா தடுப்பு மருந்து - எப்போது கிடைக்கும்?

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முதன்மையாக உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இரண்டு கட்ட பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளது

ஆக்ஸ்போர்டு பல்கலையின் கொரோனா தடுப்பு மருந்து - எப்போது கிடைக்கும்?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: July 20, 2020, 8:47 PM IST
  • Share this:
உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 வைரஸ்க்கான தடுப்பு மருந்து கண்டறிய உலகளவில் சுமார் 100 மருந்துகள் சோதனை அளவில் உள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்து, சோதனை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது.

ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பு மருந்தின் உரிமமானது, AstraZeneca என்னும் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துதான் கொரோனா தடுப்பில் செய்யப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சிகளில் முதன்மையானது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது.

தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனையானது, 3-ம் நிலை மனித பரிசோதனையில் உள்ள நிலையில், முதல் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி லான்சட்’ மருத்துவ இந்த பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


இது தொடர்பாக 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையில், மனிதர்களிடத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பு மருந்து அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவிட் 19 வைரஸை வீழ்த்தக் கூடிய வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருத்து அதிகரித்துள்ளது.


படிக்க: கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ

படிக்க: ”மீண்டு வந்து நன்றி சொல்வேன்” - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வட்டாட்சியரின் உருக்கும் பதிவை பகிர்ந்து வருந்தும் ஊர்மக்கள்..
இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பை உண்டாக்கினாலும், வைரஸை வீழ்த்தக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதால், வைரஸ் செயலிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தில் இருந்து விடுதலையே கிடைக்காதா? என்ற நிலையில் இருந்தவர்களுக்கு இந்த செய்தி ஆறுதலை அளித்துள்ளது. இந்த மருந்து எப்போது கிடைக்கும் என்பது பற்றி பிபிசி தளம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே, தடுப்பு மருந்து பொதுவெளியில் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 10 கோடி தடுப்பு மருந்துகளுக்கு பிரிட்டன் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மருந்து பொதுவெளியில் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading