ஆக்ஸ்போர்ட் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனை தமிழகத்தில் மீண்டும் தொடக்கம் 

பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்ட தடுப்பூசி தற்போது மீண்டும் பரிசோதிக்கப்பட்டு சோதனையை தொடங்கியிருக்கிறது.

  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 3:13 PM IST
  • Share this:
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரொனோ தடுப்பூசியான கோஷூல்ட்  சோதனை இந்தியாவில் மீண்டும் தொடங்கியது. கொரோனா தொற்றுக்காக லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோஷூல்ட் தடுப்பூசி சோதனை இரண்டாம் கட்ட சோதனையின் போது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாக லண்டனில் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சோதனை இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் பரிசோதனை முறையில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் தற்போது பரிசோதனையானது தொடங்கியிருக்கிறது.

மேலும்...துாத்துக்குடியில் ரூ.144 கோடி இரிடியத்தை விற்க முயற்சி... சிக்கிய அமமுக பிரமுகர்...



இந்தியாவில் 16 மையங்களில் நடைபெறும் சோதனை தமிழகத்தில் இரண்டு மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனையில் சோதனைகள் தொடங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading