தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு புதிய கிளையை திறந்த பிரபல பிரியாணி கடை

கொரோனா காலத்தில் ஓய்வின்றி உழைக்கும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பிரியாணி கடையின் புதிய கிளையை தூய்மைக் பணியாளர்களை கொண்டு திறக்க வைத்து மரியாதை செய்துள்ளனர்.

  • Share this:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் 9-வது கிளையை சென்னை தி.நகர் பேருந்து நிலையம் எதிரே இன்று திறந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்களில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக தூய்மைப் பணியாளர்களின் பணி போற்றுதலுக்குரியது.

அப்படிப்பட்ட தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சென்னை தி.நகரில் இன்று புதிதாக திறந்துள்ள பிரியாணி கடையை அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கொண்டு திறந்து தொப்பி வாப்பா பிரியாணி கடையின் உரிமையாளர் கௌரவபடுத்தியுள்ளார்.

இந்த செயல் தூய்மை பணியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading