• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரவல் நிலையாக உள்ளது: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரவல் நிலையாக உள்ளது: மத்திய அரசு தகவல்

நாட்டில் கொரோனா பரவல் நிலையாகி வருவதாக  நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நாட்டில் கொரோனா பரவல் நிலையாகி வருவதாக  நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு  குறையத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் எடுத்துவரும்  தீவிர நடவடிக்கைகளின் வெளிப்பாடாகவே இது கருதப்படுகிறது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே. பால், இந்தியாவில் கொரோனா  சூழல் நிலைபெற்றுள்ளதாகவும், அதனை மேலும் நிலைபடுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

    நாட்டின் 85 சதவீத கொரோனா தொற்று பரவல் 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாட்டின் 11 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கும் மேலானோர்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 8 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், சட்டீஷ்கர் ஆகிய மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் அதேவேளையில், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 83.83 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு நிலையான தகவல்களை நாம் காணலாம் என தெரிவித்துள்ள பால்,  சில மாநிலங்கள் தெளிவான ஒரு வடிவத்தை காட்டுகின்றன. சில மாநிலங்கள் நிலை குறித்து கவலைகள் உள்ளன. இன்னும் சில மாநிலங்களில் தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றன.

    இது ஒரு கலவையான படம். எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்த அரசு முயன்று வருகிறது. தொற்று குறைவதை உறுதி செய்யும் வகையில் பங்காற்றுவோம் என்று கூறினார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: