முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா வைரஸ் பீதி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ₹6 லட்சம் கோடி நஷ்டம்..!

கொரோனா வைரஸ் பீதி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ₹6 லட்சம் கோடி நஷ்டம்..!

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

வர்த்தகத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இன்றும் பங்குச்சந்தை சரிவில் தொடங்கியதால் இன்று மட்டும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இன்று பங்குச்சந்தை வர்த்தகம் விடுமுறைக்குப் பின் தொடங்கிய போதும் பெரும் சரிவுடனே தொடங்கியது. கொரோனா வைரஸ் பீதியால் ஆசியா நாடுகள் மட்டுமின்றி சர்வதேச பங்கு வர்த்தகமும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. மும்பை பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவிலேயே நீடித்து வருகிறது.

இன்றைய சரிவால் முதலீட்டாளர்கள் இன்று மட்டும் சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். வர்த்தகத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் பெரும் அளவிலான சரிவைச் சந்தித்துள்ளது.

இன்றைய பங்கு வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2713.41 புள்ளிகள் சரிந்து 31,390.07 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 757.80 புள்ளிகள் வீழ்ந்து 9,197.40 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.

மேலும் பார்க்க: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இமய மலை சுற்றுலா... 20 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் நிலை!

First published:

Tags: CoronaVirus, Sensex