கிர்கிஸ்தானில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தவிப்பு 

கிர்கிஸ்தானில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தவிப்பு 

நீட் தேர்வினால் சேர்க்கை கிடைக்காதவர்கள், செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால், கிர்கிஸ்தானில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்க ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்கள் சென்றுள்ளனர். 

  • Share this:
கொரோனா பொது முடக்கத்தால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட 800-க்கும் மேற்பட்டவர்கள் தற்போது கிர்கிஸ்தானில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

படிப்பை முடித்தவர்கள், விசா காலம் முடிந்தவர்கள் நாடு திரும்ப முடியவில்லை. மற்ற மாநிலங்களுக்கு விமானப் போக்குவரத்து வசதி செய்யப்படுவது போல் தமிழ்நாட்டுக்கும் சிறப்பு விமானம் இயக்க வேண்டும். குறிப்பாக மூன்று கட்டங்களாக இந்தியாவிற்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கு ஒரு விமானம் கூட வரவில்லை.

படிப்பை முடித்த மாணவர்கள் உணவு, மருத்துவ வசதியின்றி தவிக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு தமிழ் மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் குவைத், துபாய், சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களும் இதே போன்ற கோரிக்கையை விடுத்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிர்கிஸ்தானில் தவிப்போரையும் அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் சென்னை அழைத்துவர முடியாவிட்டால், திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கு அழைத்து வர வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக தொடரும் போராட்டம் 

 


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published: