• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ராயபுரத்தில் 3500-ஐக் கடந்த பாதிப்பு: தண்டையார்பேட்டையில் ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று

ராயபுரத்தில் 3500-ஐக் கடந்த பாதிப்பு: தண்டையார்பேட்டையில் ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையில், ஒரே நாளில் அதிகபட்சமாக, தண்டையார்பேட்டையில் 203 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 167 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் ஜுன் 5ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 28,694 தொற்றுகளில், சென்னையில் 1116 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. இதில், 10,156 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 69 சதவிகிதம் ஆகும்.

சென்னையில், ஒரே நாளில் அதிகபட்சமாக, தண்டையார்பேட்டையில் 203 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 167 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணாநகரில் 124 பேரும், திரு.வி.க.நகரில் 103 பேரும், தேனாம்பேட்டை 109 பேரும், கோடம்பாக்கம் 79 பேரும்,  திருவொற்றியூரில் 61 பேரும், அடையாறு  52 பேரும், அம்பத்தூரில் 49 பேரும், மாதவரத்தில் 46 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பெருங்குடியில் 31 பேரும், ஆலந்தூரில் 25 பேரும், சோழிங்கநல்லூரில் 23 பேரும், வளசரவாக்கத்தில் 21 பேரும்,  மணலியில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் - 3552
தண்டையார்பேட்டை -  2470
தேனாம்பேட்டை -  2245
கோடம்பாக்கம் - 2202
திரு.வி.க.நகர் -  1958
அண்ணா நகர் -  1784
அடையாறு - 1094
வளசரவாக்கம் -  996
அம்பத்தூர் -  733
திருவொற்றியூர் -  731
மாதவரம் -  536
சோழிங்கநல்லூர் - 362
பெருங்குடி - 365
ஆலந்தூர் -  314
மணலி - 274

ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.  சென்னையில் இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சென்னையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 10000-ஐ கடந்துள்ளது.

ராயபுரத்தில் ஜுன் 3-ஆம் தேதி 3000ஐ கடந்த நிலையில், அடுத்த 3 நாட்களில் 3500-ஐ கடந்துள்ளது. ராயபுரத்தில், மொத்த உள்ள 18 வார்டுகளில், எஸ்.எம்.நகர், அன்னை சத்யா நகர், திடீர் நகர், ஆஞ்சநேயர் நகர், பி.கே.ராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 59.98 சதவிகிதத்தினரும், பெண்கள் 40.01 சதவிகிதத்தினரும், திருநங்கைகள் 0.01 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று? : வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிக்குமாறு தலைமை பதிவாளர் அறிவிப்பு

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: