கொரோனாவைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் எரிசாராயத்தைக் குடித்து 300 பேர் பலி - ஈரானில் நடந்த சோகம்

மாதிரிப் படம்

 • Share this:
  ஈரானில் எரிசாராயத்தைக் குடித்தால் கொரோனா குணமடையும் என்ற வதந்தியை நம்பிக் குடித்த 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  ஈரானில் கொரோனா வைரஸின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. இதுவரையில் ஈரானில் 29,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
  மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரும் பாதிப்பைச் சந்தித்த நாடாக உள்ளது ஈரான்.

  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு இல்லாததாலும், சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பியதாலும் ஈரான் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது. ஆல்கஹால் குடித்தால் கொரோனா தாக்காது என்ற வைரஸ் பரவிய நிலையில், அதனை நம்பி ஈரானில் ஏராளமான மக்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் குடித்துள்ளனர்.

  5 வயதுள்ள குழந்தைக்கு கூட அவர்களது பெற்றோர்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் கொடுத்துள்ளனர். ஈரானிய ஊடகத்தில் வெளியான செய்தியில் கொரோனாவைத் தடுக்க எரிசாராயத்தைக் குடித்ததில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் ஆல்கஹால் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

  Also see:
  Published by:Karthick S
  First published: