• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ராயபுரத்தில் 1500-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு: சென்னை கொரோனா அப்டேட்..!

ராயபுரத்தில் 1500-ஐக் கடந்தது கொரோனா பாதிப்பு: சென்னை கொரோனா அப்டேட்..!

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.27 சதவீதம் ஆண்கள், 39.71 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1538-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மே 20-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 743 தொற்றுகளில், சென்னையில் 557  பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 8,228 பேரில், 2,826 பேர் குணமடைந்துள்ளனர். 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர்  62.3 சதவிகிதம். அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில்தான்  67.8 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 115 பேரும்,  திரு.வி.க.நகரில் 76 பேரும், கோடம்பாக்கம் 57 பேரும், அண்ணாநகரில் 52 பேரும்,  தண்டையார்பேட்டையில் 50 பேரும், தேனாம்பேட்டையில் 47 பேரும், திருவொற்றியூரில் 39 பேரும், அடையாறு 33 பேரும், வளசரவாக்கத்தில் 26 பேரும், அம்பத்தூரில் 22 பேரும், மாதவரத்தில் 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மணலியில் 8 பேரும், பெருங்குடியில் 7 பேரும், ஆலந்தூரில் 6  பேரும், சோழிங்கநல்லூரில் 4 பேரும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் - 1538
கோடம்பாக்கம் - 1192
திரு.வி.க.நகர் - 976
தேனாம்பேட்டை - 869
தண்டையார்பேட்டை - 773
அண்ணா நகர் -  662
வளசரவாக்கம் - 570
அடையாறு - 446
அம்பத்தூர் - 352
திருவொற்றியூர் -  221
மாதவரம் - 172
சோழிங்கநல்லூர்  - 109
மணலி - 108
பெருங்குடி - 103
ஆலந்தூர் -  90

வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மாதவரம், மணலி ஆகிய 5 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் புதிதாக 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 5 மண்டலங்களில் இதுவரை 2,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய 5 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் 254 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் 76 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த 5 மண்டலங்களில் 1,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.27 சதவீதம் ஆண்கள், 39.71 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: