Home /News /coronavirus-latest-news /

தமிழகத்திலிருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பரிதவிப்பு... சிறப்பு ரயில் எப்போது...?

தமிழகத்திலிருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பரிதவிப்பு... சிறப்பு ரயில் எப்போது...?

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

ரயில் இயக்குவதற்கு தமிழக அரசிடமிருந்து கோரிக்கைகள் வரவில்லை என்கிறது ரயில்வே துறை.

ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு தமிழக அரசு கூறியிருந்த இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். இன்று பயணத்துக்கான தேதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ரயில்வே துறை அவர்களுக்கு ரயில்கள் ஒதுக்கவில்லை.

ரயில்வே துறையிடம் கேட்டபொழுது, தமிழக அரசிடமிருந்து அதற்கான கோரிக்கைகள் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் சிக்கியுள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சிறப்பு ரயில்களில் 90% இருக்கை முழுமையடைந்தால் மட்டுமே ரயில்கள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுக்கு ரயில்வேதுறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு சார்பில் வெளிமாநிலத்தவர்கள் எத்தனை நபர்கள் சொந்த மாநிலங்கள் செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்ற விவரங்களை முழுமையாக ரயில்வே துறைக்கு வெளியிடவில்லை. அதேபோல விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடல்நலம் குறித்த தகவல்களும் சேகரிக்கப் படவில்லை. இதனால் எப்பொழுது சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Indian Railways, Lockdown

அடுத்த செய்தி