வரலாற்றில் நான்காவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்தி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் நான்காவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்தி வைப்பு
ஆஸ்கர்
  • Share this:
உலக அளவில் சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 93 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உலகெங்கும் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவம், 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவம் ஆகியவற்றால் மூன்று முறை ஆஸ்கர் விருதுகள் ஒத்தி வைக்கப்பட்ட து.
இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் நான்காவது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading