எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

எஸ்.பி.பி குணமடைய பலரும் பிரார்த்தனைச் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், “தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட மீண்டு வாருங்கள்” என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்
  • Share this:
பிரபல பாடகர் எஸ்.பி.பி கொரோனாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் குணமடைய வேண்டும் என திரை உலகினர், அரசியல் பிரமுகர்கள் என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது அற்புதக் குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனி இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.

அற்புதமான குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட மீண்டு வாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்ட ட்வீட்டில், தனது குரலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது முகமாக தானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பதாக கூறியுள்ளார். விரைவில் மீண்டு வாருங்கள் அன்னைய்யா எனவும் கமல் பதிவிட்டுள்ளார்.
First published: August 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading