ஜூன் 8-ஆம் தேதி முதல் திருப்பதி கோவில் திறப்பு: தேவஸ்தானம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

கொரோனா அறிகுறிகளுடன் வரும் பக்தர்களை திருப்பதி மலைக்கு செல்லாமல் தடுக்க தெர்மல் ஸ்கிரீனிங் கேமராக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாங்கியுள்ளது.

ஜூன் 8-ஆம் தேதி முதல் திருப்பதி கோவில் திறப்பு: தேவஸ்தானம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
திருப்பதி - கோப்புப் படம்
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்த மாதம் எட்டாம் தேதி முதல் முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இரண்டரை மாத இடைவெளிக்குப் பின் பக்தர்களுக்கு  சாமி தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. பக்தர்களின் உடல் வெப்பத்தைச் சோதிக்க தெர்மல் ஸ்க்ரீனிங் கேமராக்களை வாங்கியுள்ளது தேவஸ்தானம்

பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் போது சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை முழு அளவில் பின்பற்ற வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கார்ப்பரேட் அலுவலகங்கள் தங்கள் அலுவலக ஊழியர்கள் பணிக்கு வரும்போது அவர்களுடைய உடல் வெப்பத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தும் தெர்மல் ஸ்கிரீனிங் கேமராக்களை தேவஸ்தானம் வாங்கியுள்ளது.


பரிசோதனை அடிப்படையில் நேற்று முன்தினம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்ற போது தெர்மல் ஸ்கிரீனிங் கேமராவை தேவஸ்தான சுகாதாரத்துறையினர் சோதித்து பார்த்தனர்.

இந்த நிலையில் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச்சாவடி, வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், தங்கும் அறைகள் ஒதுக்கீடு கவுண்டர்கள், லட்டு பிரசாத விநியோக கவுண்டர்கள், திருப்பதி மலையில் உள்ள அன்னதான கூடம் ஆகியவற்றில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் பக்தர்கள் செல்லாமல் தடுக்க தெர்மல் ஸ்கிரீன் கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மனிதர்கள் நடந்து வரும் போது அவர்கள் 6 அடி தூரத்தில் இருக்கும் போதே இந்த தெர்மல் ஸ்கிரீங் கேமராக்கள் அந்த மனிதனின் உடல் வெப்பத்தை கண்டுபிடித்து திரையில் காண்பிக்கும் திறன் படைத்தது ஆகும்.மேலும் படிக்க...

Photos | ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்









First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading