அரசு உத்தரவை மீறி வணிக நோக்கத்துடன் திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்!

ராமநாதபுரத்தில் திறந்துள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

அரசு உத்தரவை மீறி வணிக நோக்கத்துடன் திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்!
(மாதிரிப்படம்)
  • Share this:
ராமநாதபுரத்தில் அரசு உத்தரவை மீறி வணிக நோக்கத்துடன் திறக்கப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பொருட்கள், காய்கறி, பால், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இராமநாதபுரம் நகர் பகுதியில் வணிக நோக்கத்துடன் சில கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி ஆணையர் விஸ்வநாதனுக்கு புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து அவர் ஆய்வு நடத்தியபோது, அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் வணிக நோக்கத்துடன் சிலர் கடைகளைத் திறந்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனால் அந்தக் கடைகளைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தார். மேலும், ராமநாதபுரத்தில் திறந்துள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.


Also see:

  
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading