ஊரடங்கு: வாழ்வாதாரத்தை இழந்த உதகை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.!

ஊரடங்கு நீக்கப்பட்ட பின் வாகனத்தை பராமரித்து இயக்கவே பெரிய தொகை வேண்டுமென வாகன ஓட்டிகள் ஆதங்கப்படுகின்றனர்

ஊரடங்கு: வாழ்வாதாரத்தை இழந்த உதகை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.!
உதகை (கோப்புப்படம்)
  • Share this:
ஊரடங்கு காரணமாக உதகை வெறிச்சோடியதால், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே மாத சீசனில் உதகை களைகட்டும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். இவர்களை ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் அழைத்துச்செல்லும் பணியில் வாகன ஓட்டிகள் மும்முரமாய் இருப்பர். சீசன் மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தை வைத்துதான், இவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மழைக்காலத்தை சமாளிக்க வேண்டும்.

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, சுற்றுலா வாகன ஓட்டிகளின் 6 மாத வருமானத்தை அழித்துள்ளது.


இது குறித்து சுற்றுலா வாகன ஓட்டி வினித் கூறுகையில்,  ”உதகையின் சுற்றுலா பகுதிகள் அனைத்தும் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். நிவாரணத் தொகையை பெறுவதிலும் பெரும்பாலானோருக்கு சிக்கல்” இருப்பதாக கூறுகிறார்.

மேலும் ஊரடங்கு நீக்கப்பட்ட பின் வாகனத்தை பராமரித்து இயக்கவே பெரிய தொகை வேண்டுமென வாகன ஓட்டிகள் ஆதங்கப்படுகின்றனர்

காப்பீடு வரி, அடுத்தடுத்து வங்கி கடன் தவணை, வீட்டுச்செலவு போன்றவற்றை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading