கோயில்களில் பொது தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் வழிபாடு

கோயில்களில் பொது தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் வழிபாடு

பொதுதரிசனத்தில் மக்கள் -திருச்சி

கொரோனா காரணமாக கோயில்களில் பொது தரிசனம் மட்டும் அனுமதி என்றும் சிறப்பு பூஜை, திருவிழாக்கள் ரத்து என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் சிறப்பு வழிபாடு, திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், பக்தர்களுக்கு வழக்கமான பொது தரிசனம் நடைபெற்று வருகிறது. இதன்படி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன், திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரில் உள்ள வழி விடு வேல்முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் தனி நபர் இடைவெளி, முகக் கவசம் அணிந்து  வழிபட்டு வருகின்றனர்.

கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் பூட்டப்பட்டதால் நுழைவாயில் நின்று பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.

மேலும் படிக்க... இந்தியாவில் ஒரேநாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா....

மலைக்கோட்டை சித்திரை திருவிழா ரத்து

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு, திருக்கல்யாணம், செட்டிப் பெண் மருத்துவம் பார்க்கும் நிகழ்வு ( காவிரி ஆற்றை கடக்க முடியாமல் தவித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இறைவன் (தாயுமானவர்) தாயாக வந்து பிரசவம் பார்த்ததாக செவி வழிக்கதையை நிகழ்த்துவது) மற்றும் சித்திரை திருவிழா ஆகியவை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மலைக்கோட்டையில் சித்திரைத் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: