மீண்டு வரும் ராயபுரம் - 70 நாட்களுக்குப் பின் குறைந்த தொற்று எண்ணிக்கை

ராயபுரம் மண்டலத்தில் புதிதாக 29 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 70 நாட்களுக்கு பின் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று பதிவாகி உள்ளது. 

மீண்டு வரும் ராயபுரம் - 70 நாட்களுக்குப் பின் குறைந்த தொற்று எண்ணிக்கை
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் இதுவரை 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 64,036 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 15,606 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆரம்பம் முதலே ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொற்று பரவல் குறையத்தொடங்கி உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால் தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து அந்த மண்டலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம், நடமாடும் மருத்துவ முகாம், கொரோனா விழிப்புணர்பு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.


Also read... வேதியியல் தேர்வில் 5 மதிப்பெண் தான் பெற்றேன் - மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

மே முதல் வாரத்தில் இருந்து ராயபுரத்தில் தொற்று அதிகரிக்க தொடங்கியது. ஜுன் மாதத்தில் உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், ஜுலை 2ம் தேதி முதல் ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது.

நேற்று ராயபுரத்தில் புதிதாக 29 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மே 5ம் தேதிக்கு பின், 70 நாட்களுக்கு பிறகு பதிவாகி உள்ள குறைந்த தொற்று எண்ணிக்கை இதுவாகும்.ராயபுரத்தில் கடந்த 1ம் தேதி 2309 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த எண்ணிக்கை இன்று 1101 ஆக குறைந்துள்ளது. ராயபுரத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 9,869 பேரில், 8,596 பேர் குணமடைந்துள்ளனர். இது 87 சதவிகிதமாகும். அதிகமானோர் குணமடைந்தோர் மண்டலமாகவும் ராயபுரம் மாறி உள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading