'வெங்காயம் ரூ50-60-க்கு விற்றபோது பாஜகவினர் வெங்காயமாலை அணிந்து போராடினர்' - தேஜஸ்வி யாதவ் சரமாரி குற்றச்சாட்டு..

'வெங்காயம் ரூ50-60-க்கு விற்றபோது பாஜகவினர் வெங்காயமாலை அணிந்து போராடினர்' - தேஜஸ்வி யாதவ் சரமாரி குற்றச்சாட்டு..

ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ்

பீகார் மாநிலத்தில் லஞ்சம் தராமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது குறித்து, பாஜகவினர் அமைதி காப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

  ஒருகாலத்தில் கிலோ 50-60 ரூபாய்க்கு வெங்காயம் விற்றபோது பாஜகவினர் வெங்காய மாலை அணிந்து போராடினர், ஆனால் அவர்கள் தற்போது மவுனம் சாதித்து வருவதாகவும் அவர் சாடினார். பீகாரில் மட்டும் ஆளும் அரசில் 30 ,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார்.

  பீகார் மாநிலத்தில் லஞ்சம் தராமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விலைவாசி உயர்வு மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்னை என்று கூறிய அவர், பீகாரில் வேலைவாய்ப்பின்மை, வறுமை உயர்ந்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
  Published by:Sankaravadivoo G
  First published: