ஊரடங்கால் வீழ்ச்சியடைந்த வெங்காய விலை!

வெங்காய விலை

ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி தொடரும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • Share this:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காய உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் வரை விற்றது. எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கால் திருச்சியில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடரும்  ஊரடங்கினால் சிறிய டிபன் கடைகள் தொடங்கி பெரிய ஓட்டல்கள் வரை மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதித்திருந்தாலும் பெரும்பான்மையானவை மூடப்பட்டுள்ளன. அதனால் விற்பனை செய்யப்படாமல் வெங்காயம் தேக்கம் அடைந்து அதன் விலை வீழ்ச்சியடைந்தது.

திருச்சியில் வெங்காய மொத்த விற்பனை சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 5 முதல் 15 ரூபாய் வரை குறைந்துள்ளது. சில்லரை விற்பனைக் கடைகளில் கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது.

பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 முதல் 120 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது ஒரு  கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.

20-ம் தேதியில் இருந்து ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் உள்ளூர் உற்பத்தி மற்றும் வெளி மாநில இறக்கமதி அதிகரித்துள்ளது. ஆனால், டிபன் கடைகள், ஓட்டல்கள் பெரும்பான்மையாக மூடப்பட்டுள்ளதால் விலை பெருமளவு குறைந்துள்ளது.

திருச்சி மொத்த விற்பனை சந்தையில் மட்டும் சுமார் 500 டன் பெரிய வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி தொடரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Also see... 


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published: