கொரோனா பரவத் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கொரோனா தாக்கிய முதல் நபர் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவத் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: November 17, 2020, 10:00 PM IST
  • Share this:
சீனாவின் ஊகான் மாகாணத்திலிருந்து பரவிய இந்த நோய், உலகம் முழுவதும் ஐந்தரை கோடி பேரை தாக்கியுள்ளது. 13 லட்சம் உயிர்களை காவுவாங்கியுள்ளது. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய் தாக்கியிருப்பது முதன்முதலாக கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி உறுதிசெய்யப்பட்டதாக "சவுத் சீனா மார்னிங் போஸ்ட்" என்ற நாளிதழ் தெரிவிக்கிறது. ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான நபருக்கு இந்த நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இவர் தான் நோய் தாக்கிய முதல் நபரா என்பது உறுதிசெய்யப்படவில்லை என்றும் நாளிதழ் குறிப்பிடுகிறது. நவம்பர் 17-ம் தேதிக்குப் பிறகு, நாள்தோறும் ஒன்று முதல் 5 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது, ஊகானில் உள்ள சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்னர் ஊகான் சந்தை காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.மேலும், புதிதாக வைரஸ் பரவியிருப்பதை டிசம்பர் மாத இறுதியிலேயே மருத்துவர்கள் உணர்ந்ததாகவும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. எனினும், உலக சுகாதார அமைப்பின் ஆவணங்களில், முதல்முறையாக டிசம்பர் 8-ம் தேதி கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் சந்தைக்கு மருந்து வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading