திருச்சியில் கொரோனா வார்டில் இருந்து தப்பி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபர்...

குடும்பத்தினரையும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தி உள்ளனர். 

திருச்சியில் கொரோனா வார்டில் இருந்து தப்பி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபர்...
 திருச்சி அரசு மருத்துவமனை
  • Share this:
திருச்சியில் கொரோனா வார்டில் இருந்து ஒருவர் நேற்று இரவு ஓடியுள்ளார். அதனை அறிந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரை, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 120 பேர் உட்பட மொத்தம் 125 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் 117 பேர் அண்மையில் டெல்லி சென்று திரும்பியவர்கள். திருச்சியில் உள்ளவர்களில் 53 பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் டெல்லி சென்று திரும்பிய 17 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 67 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இவரது ரத்த மாதிரி முடிவு இன்று தெரிய வரும் .   மேலும் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளோரின் எண்ணிக்கையை இன்று அதிகாலை மருத்துவமனை ஊழியர்கள் வழக்கம்போல் சரிபார்க்கும் போது ஒருவர் இல்லாததைக் கண்டறிந்துள்ளனர்.

அப்போதுதான் தெரிய வந்தது, நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி ஓடியது.
இது குறித்து, திருவெறும்பூர் காவல் நிலைய  போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை எச்சரித்து, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீசார் அனுப்பி வைத்தனர்.குடும்பத்தினரையும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தி உள்ளனர்.  கொரோனா பிரிவில் கொடுத்த உணவு பிடிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை வீட்டு சாப்பாட்டிற்கு ஓடி வந்ததாக கூறியுள்ளார்.

Also see...
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading