Home /News /coronavirus-latest-news /

10 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு துரத்தப்பட்ட இளைஞர்... செல்போன் திருட்டு... சொகுசு வாழ்க்கை...! பிடிபட்டது எப்படி...?

10 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு துரத்தப்பட்ட இளைஞர்... செல்போன் திருட்டு... சொகுசு வாழ்க்கை...! பிடிபட்டது எப்படி...?

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது அனைத்து சம்பவத்திலும் ஈடுபட்ட நபர் ஒருவரே என தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது அனைத்து சம்பவத்திலும் ஈடுபட்ட நபர் ஒருவரே என தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது அனைத்து சம்பவத்திலும் ஈடுபட்ட நபர் ஒருவரே என தெரியவந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு துரத்தப்பட்ட இளைஞர் சென்னையில் மொபைல் பறிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

எழும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் கடந்த மாதம் தொடர்ச்சியாக  இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த நபர் ஒருவர் மொபைல் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார் குற்றவாளியை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது அனைத்து சம்பவத்திலும் ஈடுபட்ட நபர் ஒருவரே என தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவான மர்ம நபரின் புகைப்படத்தை சென்னையிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா நோய் பாதுகாப்பு பணிகளில் குற்றவாளியை தேடும் பணி சற்று தாமதமான நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கோட்டூர்புரம் பகுதியில் நடைபயிற்சி சென்ற நபரிடம் செல்போன் பறிக்க முயன்ற ஒரு நபரை, கோட்டூர்புரம் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் மொபைல் பறிப்பு வழக்கு இருப்பது தெரியவந்ததால், கோட்டூர்புரம் போலீசார் எழும்பூர் போலீசாரிடம் பிடிபட்ட அந்த நபரை ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிடிபட்ட அந்த நபர் செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த வினோத் அலெக்சாண்டர் (எ) குதிரை சிவா என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2011- ம் ஆண்டிலிருந்து திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுப்பட்டு பல முறை சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.

மொபைல் திருடும் சிசி டிவி காட்சி


இவர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குடும்ப உறுப்பினர்கள் இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வந்த இவர் மொபைல் பறிப்பு மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்றுள்ளார்.

இவர்மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மொபைல் பறிப்பு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகள் பதியப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்த 9 மாதமாக சிறையில் இருந்துள்ளார். தற்போது கொரொனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக சிறையிலிருந்து நிபந்தனையின் பேரில் இவர் வெளியே வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சிறையிலிருந்து வெளியே வரும் இவர் மெரினா கடற்கரை, பிளாட்பார்ம் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் தங்கி கொண்டு மொபைல் பறிப்பு மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை எடுத்துக்கொண்டு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் அடிக்கடி சென்று ஹோட்டலில் ரூம் எடுத்து பெண்கள், மது என உல்லாசமாக இருந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து 6 விலை உயர்ந்த மொபைல் போன்களும், யமஹா திருட்டு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறைக்கு அனுப்பினர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி