சென்னையில் மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, அண்ணா சாலை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் கடையில் கிருமி நாசினி, முகக் கவசம் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் அந்த கடையின் உரிமையாளர் தருணிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது கடையில் உள்ள மருத்துவ உபகரணங்களின் இருப்பு, கடந்த சில நாட்களாக அவை எத்தனை ரூபாய்க்கு விற்கப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.
மேற்கொண்டு விசாரணை தொடர வேண்டி உள்ளதால், அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.