சென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய 54 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். 

சென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு
கோப்புப் படம்
  • Share this:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 54 வயது ஆண் கடந்த 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. வீட்டுக்கு சென்று மூன்று நாட்களில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு 21-ம் தேதி அவரது குடும்பத்தார் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இறந்த பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...




 
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading