CoronaVirus : இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று : புதிதாக 2,11,298 பேருக்கு பாதிப்பு

கொரோனா தொற்று

இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது நோய் தொற்று குறையத் தொடங்கியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா முழு ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள், பொதுமக்களின் விழிப்புணர்வு ஆகியவவை காரணமாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

    சில தினங்களுக்கு முன்னர் நோய் தொற்றின் தினசரி பாதிப்பு 40 நாட்களுக்குப் பின்னர் சரிவடைந்து 2 லட்சத்துக்கு கீழே வந்தது.நேற்று 2,08,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,11,298 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,73,69,093 ஆக உயர்வடைந்துள்ளது.

    நோய் பாதிப்பால், நாட்டில் 3,847 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,83,135 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உயர்வடைந்துள்ளது.

    கொரோனா பாதித்த 24,19,907 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20,26, 95,874 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

     

    மேலும், இந்தியாவில் இதுவரை 33,69,69,353 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 21,57,857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published: