முதல்நாளில் அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் 18,412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

மாதிரி படம்

அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் 18,412 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. எந்தப் பகுதியிலும் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது. 600 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 99 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2684 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. சென்னையை பொறுத்தவரை 310 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 38 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக் கொண்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு கூட பக்க விளைவு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி, தனது அலுவலகத்திலிருந்தபடி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது

    இந்நிலையில், முதல் நாளில் நாடு முழுவதும் 1,91, 81 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் 18,412 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. எந்தப் பகுதியிலும் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி


    மேலும் படிக்க... கொரோனா தடுப்பூசியை நிச்சயமாக போட்டுக் கொள்வேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    முதல் நாள் என்பதால், சில தடுப்பூசி மையங்களில் பயனாளிகளின் தகவல்களை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், முதல் நாளில் பட்டியலில் சேர்க்கப்படாத சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: