கொரோனோ தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் காடிலா நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு

கொரோனோ தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் காடிலா நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு

ஆய்வகத்தில் பிரதமர் மோடி

ஜைடஸ் நிறுவனம் உருவாக்கி வரும் உள்நாட்டு மரபணு சார்ந்த மருந்து குறித்து அதிகம் தெரிந்துகொள்ள அகமதாபாத்தில் உள்ள அந்நிறுவனத்துக்கு சென்றதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை,  பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொரோனா பெருந்தொற்றுக்கு மருந்து தயாரிக்க இந்தியாவில் 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இதில் 3 மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பிரதமர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

  முதல்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள ஜைடஸ் காடிலா நிறுவனத்தை பிரதமர் மோடி சென்று பார்வையிட்டதுடன் மருந்து தயாரிப்பு நிலைகள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.

  பிரதமர் மோடி


  அந்நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி என்ற தடுப்பூசி 2ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனங்களிலும் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.

  Also read... புயல் உருவாக வாய்ப்பு... நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் - வானிலை மையம்

  ஜைடஸ் நிறுவனம் உருவாக்கி வரும் உள்நாட்டு மரபணு சார்ந்த மருந்து குறித்து அதிகம் தெரிந்துகொள்ள அகமதாபாத்தில் உள்ள அந்நிறுவனத்துக்கு சென்றதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  கொரோனா தடுப்பு மருந்து பயணத்தில் ஜைடஸ் நிறுவனத்துக்கு முழு ஒத்துழைப்பை இந்திய அரசு அளிக்கும் என்றும் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் குழுவுக்கு பிரதமர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: