கோவிட் தொற்று நோய்க்கு மருந்தே கிடையாதா என்று இருந்த நிலை மாறி, வெற்றிகரமாக 100 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல கோவிட் மாறுபாட்டினை எதிர்கொள்ளவும், தீவிரம் ஆகாமல் தடுப்பதற்கும் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு ஓமைக்ரான் அதிவேகமாக பரவத் தொடங்கியது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஓமைக்ரான் பாதிப்பு குறையும் தொற்று ஏற்பட்டாலும் அறிகுறிகள் தீவிரமாக இருக்காது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கோவிட் தடுப்பூசி பூஸ்டர் செலுத்திக்கொண்டவர்களுக்கும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என்பது புதிய தரவின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
தடுப்பூசியுடன் பூஸ்டர் செலுத்திக்கொள்வது ஓமைக்ரான் பாதிப்பில் இருந்து பாதுகாப்பை மேம்படுத்தும் என்று ஆரம்ப கால சான்றுகள் இருந்தாலும், அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு ஆய்வுகள் எதுவும் இல்லை என்று லான்செட் ஆய்வு கூறியுள்ளது.
தடுப்பூசி பூஸ்டர் செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்துமா என்பது, தொற்று பாதிப்பு ஏற்பட்ட காலம் முதல் மற்றும் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்கள் இதற்கிடையே உள்ள இடைவெளியில், எவ்வாறு தடுப்பூசி வேலை செய்கிறது என்பது பற்றிய கூடுதல் தரவுக்காக காத்திருக்கிறோம் என்று ஆய்வு கூறியது.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்க தேசிய நோய்த்தொற்று மையம் தொற்று பாதிப்பு விகிதம், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றால் ஏற்படும் இறப்பு ஆகியவற்றை பற்றிய ஆரம்பகால தரவை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் இயற்கையாகவே காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதைத் தொடர்ந்து தடுப்பூசி, பூஸ்டர் ஆகியவை நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைக்கும் என்று இந்தத் தரவு கூறுகிறது.
Also Read : மருந்துகளால் அழிக்க முடியாமல் பலம்பெறும் பாக்டீரியாக்கள்..
SARS-CoV-2 Omicron (B.1.1.529) ஆனது மிகவும் தீவிரமான ஒரு மாறுபாடு என்று WHO வால் குறிப்பிடப்பட்டது. இதில் உள்ள குறிப்பிட்ட பிறழ்வுகளின் பரவும் தன்மை, மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் ஆகியவற்றை அதிகரிக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வு கூறியது. பூஸ்டர் செலுத்திக் கொண்டாலும் பரவும் ஒமைக்ரான் பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், கோவிட்-19 தொற்று, குறைந்து கொண்டே வருகிறது. கோவிட் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது மற்றும் புதிய தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைகிறது.
கடந்த ஏழு நாட்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை முன்னேறியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்கா/கனடாவில் 43 சதவீதமும், மத்திய கிழக்கு நாடுகளில் 35 சதவீதமும், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா/கரீபியன் நாடுகளில் 23 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 22 சதவீதமும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டு கொள்வது பிறக்கும் குழந்தையை COVID தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.! ஆய்வு
நியூசிலாந்து, ஹாங்காங், மலேசியா, வியட்நாம் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கணிசமான அளவு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஓசியானியாவில் இந்த வாரம் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
Also Read : குழந்தைகளிடையே அதிகரிக்கும் நீரிழிவு நோய்
கோவிட் தொற்றால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை உலகளவில் ஏழு சதவீதம் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 10,355 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அதி வேகமாக பரவும் ஒமைக்ரான் மாறுபாடு, கோவிட் தொற்றின் முந்தைய அலைகளை விட நான்கு மடங்கு அதிகமாக பரவி வந்தாலும், தினசரி இறப்பின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19, Omicron