2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகமே புத்தாண்டை எதிர்கொண்டு இருந்த வேளையில் திடீரென்று கொரோனா என்கிற புது வகை நோய் கிருமி பற்றி உலக அரங்கில் பேச தொடங்கினர். அன்று தொடங்கிய நோய் தொற்று இன்று வரையிலும் நீடித்து வருகிறது. கடந்த இரு வருடங்களும் மனித வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகவே கருதப்படுகிறது. மேலும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை என்பது முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் 2020, 2021 ஆண்டு முழுவதுமே ஊரடங்கிலேயே சென்று விட்டது.
இந்த வைரஸ் தொற்றால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். தினசரி கூலி தொழில் செய்பவர்கள் முதல் ஐ.டி துறையில் பணிபுரிபவர்கள் வரை எல்லோருடைய வாழ்வியலும் பெரிய மாற்றத்தை கண்டது. இதனால் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் வேறு வழியின்றி தங்களின் வீட்டையே அலுவலகமாக மாற்றி, பணி செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டனர். அந்த வகையில் வொர்க் ஃப்ரம் ஹோம் என்கிற புதிய வேலை அமைப்பை பின்பற்றி வந்தோம். கொரோனா பரவல் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1
ஓமைக்ரான் என்று பெயரிடப்பட்ட இந்த வகை கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் அதிகம் பரவி வருகிறது. இதனால் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும்படி இருந்த ஐ.டி துறை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். பல ஐ.டி. நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு முதல் தனது ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி கூறி வந்துள்ளது. ஆனால் தற்போது ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்நிறுவனங்களும் பெரும் குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில் சில ஐ.டி. நிறுவனங்கள் இதை பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளது. அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ.டி சேவை நிறுவனமான டாட்டா கன்சல்டன்ஸி சர்வீஸில் (TCS) தற்போது 10% ஊழியர்கள் அலுவலத்திற்கு சென்று பணிசெய்து வருகின்றனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மீதமுள்ள ஊழியர்களையும் வேலைக்கு திரும்ப அழைப்பு விடுக்கும் நேரத்தில் ஓமைக்ரான் பரவல் தொடங்கி உள்ளது. எனவே தற்போதைக்கு இதை பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் இல்லை என்று டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2
இதே போன்று இன்போசிஸ் மற்றும் ஹச்.சி.எல் நிறுவனங்களும், ஓமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் தற்போதுள்ள வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை அமைப்பையே தொடரவும் திட்டமிக்கப்ட்டுள்ளது. உலக அளவில் உள்ள பல ஐ.டி. துறை நிறுவனங்களும் இப்படிப்பட்ட முடிவை தான் தற்போதுள்ள சூழலில் பின்பற்றி வருகின்றனர்.
புதிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இல்லாத பட்சத்தில், இந்தியாவில் உள்ள 4.5 மில்லியன் ஐ.டி. ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாள் என்கிற சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்று நாஸ்காம் (Nasscom) நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் உயிர் பிழைத்திருப்பது தான் முக்கியம் என்பதால், வேலைக்கு திரும்பும்படி எந்த ஊழியர்களையும் கட்டாயப்படுத்த போவதில்லை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் மனித வள மேம்பாட்டின் தலைவரான ரிச்சர்ட் லோபோ கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.