2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் நடைபெறுவது சந்தேகமே...! டோக்கியோ ஒலிம்பிக் CEO தகவல்

”பொதுமக்களின் பார்வைக்கு ஒலிம்பிக் டார்ச் கொண்டுவரப்படுவது இந்த வாரத்துடன் நிறுத்தப்பட உள்ளது”

2021-ம் ஆண்டிலும் ஒலிம்பிக் நடைபெறுவது சந்தேகமே...! டோக்கியோ ஒலிம்பிக் CEO தகவல்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: April 10, 2020, 10:11 PM IST
  • Share this:
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம்  நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்பாராத வகையில் உலகை, கொரோனா எனும் கொடிய வைரஸ் தாக்கி உயிர்பலி வாங்க, சர்வதே ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி அடுத்த ஆண்டு அதாவது 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்தது.

வீரர்களின் உடல் திறனையும், மக்களின் உயிரையும் மனதில் வைத்து ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.


ஜப்பானில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க, உயிர்பலிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்  போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய, டோக்கியோ ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முடோ, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தான் எதுவும் குறிப்பிட முடியாது என கூறியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, நோய் தொற்று அதிகமாவதை உணர்ந்து அவசர பிரகடன நிலையை அமல்படுத்தியுள்ளார். ஆகையால், வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் பொருட்டு நிலைமையை  பொறுத்தே முடிவெடுக்க முடியும் எனவும் முடோ தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இதுவரை 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் வயதானவர்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் அதிகம் நோய் தொற்றுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளது.ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைக்கும் பட்சத்தில் திட்டமிடப்பட்ட தொகையை விட கூடுதலாக செலவாகும் என முடோ தெரிவித்துள்ளார். 2 பில்லியன் முதல் 6 பில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி முதல் 600 கோடி வரை கூடுதலாக நிதி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் டார்ச் வலம் வருவது குறித்து பேசிய முடோ, பொதுமக்களின் பார்வைக்கு ஒலிம்பிக் டார்ச் கொண்டுவரப்படுவது இந்த வாரத்துடன் நிறுத்தப்படுவதாகவும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆணைப்படி இதனை செய்வதாகவும் முடோ தெரிவித்தார்.

புது சாம்பியன், நியூ ரெக்கார்டு, என பல சாதனைகளை உலகிற்கு எடுத்துக்காட்டவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போவது வீரர்களிடையே சற்று மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading