Home /News /coronavirus-latest-news /

மதுரையில் பிச்சையெடுத்து கொரோனா நிதி வழங்கிய முதியவர்

மதுரையில் பிச்சையெடுத்து கொரோனா நிதி வழங்கிய முதியவர்

கொரொனா நிதிக்காக பிச்சை எடுக்கும் முதியவர்

கொரொனா நிதிக்காக பிச்சை எடுக்கும் முதியவர்

”பிச்சையெடுத்து பல மாவட்டங்களுக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளார் முதியவர்”

மதுரையில் தான் பிச்சை எடுத்த பணத்தை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன். உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவரான இவர், நாடோடியாக நகர்ந்து வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை வந்த அவர், பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நடைபாதையில் வசித்து வந்துள்ளார்.

ஊரடங்கு அறிவித்தபின்பாக நடைபாதைகளில் வசிப்போரை மாநகராட்சி மூலம் தன்னார்வ அமைப்புகள் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். தனக்கு கிடைத்த இந்த உதவி,  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பிற ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என கருதிய பூல்பாண்டியன், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பழ சந்தை பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தீவிர யாசகத்தில் ஈடுபட்டார்.

அதில் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நிதியாக ஒப்படைத்தார் பூல் பாண்டியன். மேலும் பிச்சையெடுத்து பல மாவட்டங்களுக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கு முன்பும் தான் பிச்சையெடுத்த பணத்தின் பெரும்பகுதியை பள்ளிகளுக்கு நாற்காலி வாங்க வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

 

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி