• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது ஓலா நிறுவனம்..!

1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது ஓலா நிறுவனம்..!

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

பணிநீக்கம் செய்ய உள்ளவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் என்று பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, ஊழியர்கள் 1400 பேரை பணியிலிருந்து நீக்க இருப்பதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

    பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓலா நிறுவனம், வாடகை கார் சேவைகளை வழங்கி வருகிறது. இதேபோல, நிதி மற்றும் உணவு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், தொழிலாளர்களுக்கு ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், கடந்த 2 மாதங்களில் நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் குறைந்திருப்பதாகவும், நிலைமை சீரடைவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, மொத்த பணியார்கள் எண்ணிக்கையில் 25 சதவிகிதமான 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், அவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: