கொரோனா பாதிப்புள்ள ஓட்டுநர்களுக்கு தினமும் 1,000 ரூபாய்- ஓலா அறிவிப்பு

ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது இணையர் என இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டலும் நிவாரணம் வழங்கப்படும்.

கொரோனா பாதிப்புள்ள ஓட்டுநர்களுக்கு தினமும் 1,000 ரூபாய்- ஓலா அறிவிப்பு
ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது இணையர் என இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டலும் நிவாரணம் வழங்கப்படும்.
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஓலா ஓட்டுநர்களுக்கு அல்லது அவர்களது துணைவியருக்கு நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா உறுதியான நாளிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு தினமும் 1,000 ரூபாய் வழங்குவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது இணையர் என இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டலாம் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கான தொகை வழங்கப்பட உள்ளது.

ஓலா ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது இணையருக்கும் இந்த சலுகை உள்ளதால் கொரோனாவை நிதிச்சிக்கல் இல்லாமல் எதிர்க்கொண்டு மீண்டுவர ஒலா நிறுவனம் உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக Mfine என்ற செயலி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து நிவாரணத் தொகையை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
மேலும் பார்க்க: கொரோனா பாதித்தவர்களுக்கு சி்றப்புக் கடன் - எஸ்பிஐ அறிவிப்பு
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading