கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்

கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே ஓய்வெடுக்காமல் பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சரால் அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.

கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்
அமைச்சர் அன்பழகன்
  • Share this:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமானதை அடுத்து அவர் நேற்று காலை வீடு திரும்பினார்.

சிகிச்சை முடிந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குறைந்தது இரண்டு வாரங்களாவது வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அமைச்சரோ நேற்று மாலை 4 மணிக்கே செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த தேதியை அறிவிப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.

Also read... பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் - WHO எச்சரிக்கை


பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவரவில்லை என்று மாணவர்கள் தயங்க வேண்டாம். பிஇ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சொன்னார்.

அப்போது உயர்கல்வித்துறை இயக்குநர், செயலாளர் உடனிருந்தனர். உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று செய்தியாளர் ஒருவர் கேட்க நன்றாக இருக்கிறேன், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி புறப்பட்டார்.

கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே அமைச்சர் நிகழ்ச்சிக்கு வந்ததால் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் சிறிய பயமும், கலக்கமும் இருந்ததை பார்க்க முடிந்தது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading