14 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவிய ஒடிசா!

ஒடிசாவில் இருந்து கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்களுக்கு  919 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன்  அனுப்பப்பட்டுள்ளது

ஒடிசாவில் இருந்து கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்களுக்கு  919 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன்  அனுப்பப்பட்டுள்ளது

 • Share this:
  ஒடிசாவில் இருந்து கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்களுக்கு  919 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன்  அனுப்பப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையின்போது இருந்தவை விட தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் அலையின்போது தொற்று குறைவாக பதிவான ஒடிசா போன்ற மாநிலங்களில் கூட தற்போது நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது.

  கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஒடிசாவில்  விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு  இன்றுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், தற்போது ஜூன் 1ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஒடிசாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளபோதிலும் பிற மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையையும் அம்மாநிலம் பூர்த்தி செய்து வருகிறது.

  கொரோனா 2 அலை பரவத் தொடங்கதுமே மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் உற்பத்தியை அம்மாநிலம் துரிதப்படுத்தியது. இதனை பிற மாநிலங்களுக்கும் நவின் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு வழங்கி வருகிறது.

  அதன்படி, கடந்த 27 நாட்களில் ஒடிசாவில் இருந்து 14  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு  16 ஆயிரத்து 809 மெட்ரிக் டன்  மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன், 919 டேங்கர்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ரூர்கிலா,  ஜெஜ்பூர்,  தெங்கனல், அங்குல் அகிய மாவட்டங்களில் இருந்து இந்த ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

  அதிகபட்சமாக,  ஆந்திராவுக்கு 5540 டன், தெலங்கானாவுக்கு 4003 டன், ஹரியானாவுக்கு 2417 டன்,  மத்திய பிரதேசத்துக்கு 1078 டன்,  உத்தரபிரதேசத்துக்கு  1032 டன் ,  தமிழகத்துக்கு  860 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து அனுப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா,  சட்டீஸ்கர்,  டெல்லி,  கர்நாடகா,  பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், சண்டிகார் ஆகிய மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: