ஒடிசாவில் 2 வாரத்துக்கு ஊரடங்கு: கொரோனா தொற்று அதிகரிப்பால் நடவடிக்கை

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 2 வார காலத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 2 வார காலத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 • Share this:
  ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 2 வார காலத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,  ஒடிசா போன்ற தொற்று குறைவாக காணப்பட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் வீரியமடைந்துள்ளது. ஒடிசாவில் தினசரி கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை கடந்துள்ளது.

  வைரஸ் பரவலின் தீவிரத்தை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக , மே 5ம் தேதி முதல்  மே 19ம் தேதி வரை 2 வார காலத்துக்கு ஒடிசாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கின்போது காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவர் என்றும் எனினும் 500 மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  அரசு போக்குவரத்து ,  மாவட்டங்களுக்கு இடையேயான பயணம்,  கல்வி நிலையங்கள், மால், உடற்பயிற்சி கூடம், சலூன்  உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகள், மருத்துவ  தேவைகளுக்கு  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை  நாட்களில்   முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஒடிசாவின் பிபிலி சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 16ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிது. எனவே, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், வேட்பாளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு  ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

   


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: