கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மறதி.. மருத்துவர்கள் விளக்கம்!!

கொரோனா பரவல்

கொரோனா நோய் தொற்றின் போது பாதிக்காவிட்டாலும் அதிலிருந்து மீண்ட பிறகு சிலருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  • Share this:
கொரோனா நோய் தொற்று பிரதானமாக சுவாச பாதையை தாக்கினாலும் நரம்பு மண்டலத்திலும் சில பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் மறதி.

சுவாசப் பாதையை தாக்கும் கொரோனா வைரஸ் மூக்கில் உள்ள நுகர்தலுக்கான நரம்புகள் வழியாக மூளையை சென்றடைந்து மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நரம்பியல் நிபுணர் சிவன் கூறுகையில், "இதனால் சில நோயாளிகளுக்கு 'குழப்ப நிலை' ஏற்படுகிறது. கொரோனா நோய் தொற்றின் போது பாதிக்காவிட்டாலும் அதிலிருந்து மீண்ட பிறகு சிலருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

காலையில் படித்த செய்தி மறந்து போகலாம், செய்ய நினைத்த காரியம் மறந்து போகலாம். அதிக நாட்கள் ஐ சி யு வில் இருந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம். " என்றார்.

கொரோனா வந்த 30% பேர் பெரும்பாலான பக்க விளைவுகள் எதுவும் தப்பித்து விடுகின்றனர். ஆனால் தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

Also read: கோவாக்சின் Vs கோவிட்ஷீல்டு Vs 7 தடுப்பூசிகள்! இவற்றின் செயல்திறன் என்ன?

பக்கவாதம், தலையில் அடி, அதிக நேரம் மயக்க மருந்தின் தாக்கத்தில் இருந்தவர்கள் உள்ளிட்டோருக்கு மறதி அதிகம் ஏற்படவும்  நீண்ட நாட்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் உத்ரா குமரேசன் கூறுகிறார்.

கொரோனா வைரஸ் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு காரணமாக சிலருக்கு நிரந்தரமாக மறதி ஏற்படலாம் என நரம்பியல் மருத்துவர் சதீஷ் குமார் கூறுகிறார். எனினும் மிக அரிதாகவே இது நிகழ வாய்ப்பிருப்பதாகவும் பெரும்பாலனவர்களுக்கு சில மாதங்களில் குணமாகிவிடும் என்றும் கூறுகிறார்.

 
Published by:Esakki Raja
First published: