மையங்கள் அதிகரித்தாலும் அதிகரிக்காத கொரோனா பரிசோதனை எண்ணிக்கை - விரிவான ரிப்போர்ட்

கோப்புப் படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 

 • Share this:
  தமிழகத்தின் உண்மையான நோய் பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்த, பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

  ஆனால், ஒரு நாளுக்கு 10,000 முதல் 12,000 பரிசோதனைகள் மட்டுமே தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மே 7-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 14,195 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  அதிகபட்ச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட மே 7-ம் தேதியில் 52 ஆய்வகங்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன. ஆனால், தற்போது 70 ஆய்வகங்கள் உள்ள நிலையில் பரிசோதனைகள் 14,000 உள்ளாகவே இருக்கின்றன.

  தமிழகத்தின் பரிசோதனைத் திறன் அதிகரிக்கப்படும் அளவுக்கு பரிசோதனைகள் அதிகரிக்கவில்லை. மே 1-ம் தேதி 9365 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், புதிதாக 203 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

  அப்போது 100-ல் இரண்டு பேருக்கு தான் பாதிப்பு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக செய்யப்படும் சோதனைகளில் 100-ல் ஆறு அல்லது ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.

  மே முதல் வாரத்தில் இருந்து பரிசோதனைகள் இருமடங்கு கூட அதிகரிக்காத போது பாதிப்பு 6 மடங்கிற்கும் அதிகமாகியுள்ளது. இந்த தரவுகளைப் பார்க்கும் போது தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

  தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரித்தால் தொற்று அதிகமாகி மக்கள் அச்சப்படுவார்களோ என எண்ணி சோதனைகள் குறைக்கப்படுகிறதா என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

  பிற தீவிர நோய்கள் உள்ளவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க, அறிகுறிகள் இல்லாதவர்களாக இருந்தாலும் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  Also read... ராயபுரத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை... சென்னை அப்டேட்!


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: