சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 635-ஆக குறைந்தது

கடந்த 20ம் தேதி பட்டியலில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 774 ஆக இருந்த நிலையில், இன்றைய பட்டியலில் 635 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 635-ஆக குறைந்தது
கோப்பு படம்
  • Share this:
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 774ல் இருந்து 635 ஆக குறைந்துள்ளது. அதேபோல், கடந்த 14 நாட்களாக புதிதாக தொற்று கண்டறியப்படாத 86 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளும் எதுவும் பொருந்தாது.

வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளின் இன்றைய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளில் புதிய தொற்று வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னையில் கடந்த 14 நாட்கள் தொற்று கண்டறியப்படாத 86 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.திரு.வி.க.நகர்-20, இராயபுரம்-17, கோடம்பாக்கம்-12, தேனாம்பேட்டை-7, வளசரவாக்கம்-6, தண்டையார்பேட்டை-5, மாதவரம்-4, திருவொற்றியூர்- 3, பெருங்குடி-3, மணலி-2, அம்பத்தூர்-2, அண்ணா நகர்-2 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் 86 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல், கடந்த 20ம் தேதி பட்டியலில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 774 ஆக இருந்த நிலையில், இன்றைய பட்டியலில் 635 ஆக குறைந்துள்ளது.

இராயபுரம்-135, திரு.வி.க.நகர்-101, அம்பத்தூர்-57, மாதவரம்-56, தேனாம்பேட்டை-54, மணலி-44, கோடம்பாக்கம்-36, திருவொற்றியூர்-32, அடையாறு-24, சோழிங்கநல்லூர்-21, வளசரவாக்கம்-18, அண்ணா நகர்-15, தண்டையார்பேட்டை-14, ஆலந்தூர்-14, பெருங்குடி-14 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading