Home /News /coronavirus-latest-news /

கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது

கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது

கோப்புப்படம்

கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24,000 கடந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.14 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9716 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



    Read: வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை: பெண்களை எச்சரிக்கும் பகீர் ரிப்போர்ட்

    அதன்படி சனிக்கிழமை அன்று வெளியான சுகாதாரத்துறை அறிக்கையில், ஒரே நாளில் 99 குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மொத்தமாக இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 79,322 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Children, CoronaVirus

    அடுத்த செய்தி