அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் - டிரம்புக்கு WHO பதிலடி

டெட்ரோஸ்

"நாங்கள் எந்தநாட்டுக்கும் ஆதரவாக செயல்படவில்லை"-WHO

 • Share this:
  கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி உலகசுகாதார அமைப்பு, அமெரிக்க அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

  நேற்று செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்டராஸ் அதனாம், உலக சுகாதார அமைப்பு எந்த நாட்டுக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்று விளக்கமளித்தார். மேலும் கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். இது நெருப்புடன் விளையாடும் விைளயட்டு. உயிர் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மேலும், அண்மையில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். கொரோனா குறித்து போதிய முன்னெச்சரிக்கையை வழங்கவில்லை எனவும். அத்துடன் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப் போவதாக அறிவித்தார்.

  இந்நிலையில், அமெரிக்கா தொடர்ந்து நிதியை அளிக்கும் என நம்புவதாக டெட்ராஸ் கூறியுள்ளார்.   

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: