தெலங்கானாவை வலம் வரும் கொரோனா கார்!

தெலங்கானாவை வலம் வரும் கொரோனா கார்!
கொரோனா வைரஸ் வடிவில் உருவாக்கப்பட்ட கார்
  • Share this:
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெலங்கானாவில் வித்தியாசமான கார் ஒன்று கொரோனா வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் சுதா கார்ஸ் என்ற பெயரில் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். வகை வகையான கார்களை வடிவமைப்பதில் சுதாகர் தனித்துவம் பெற்றவர். இதற்கு முன்பாக பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட வடிவங்களில் கார்களை உருவாக்கி அசத்தியவர். இந்த வரிசையில் கொரோனா குறித்தும் புதிய கார் வடிவமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் ஆபத்து குறித்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த கொரோனா காரை வடிவமைத்தேன் என்றார்.


கொரோனா கார் வீடியோ:



Also see...

 










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading