கொரோனா: தமிழகத்தில் 30 வயதுடைய இரு இளைஞர்கள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

கொரோனா: தமிழகத்தில் 30 வயதுடைய இரு இளைஞர்கள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

ஒரே நாளில் 71797 பேருக்கும், மொத்தமாக 97 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் புதிதாக 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7.27 லட்சத்தை கடந்துள்ளது.

  சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து ஒரே நாளில் 686 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்தது. சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் மேலும் 1818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மாநிலம் முழுவதும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11152-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 31 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் அடங்குவர். இருப்பினும், 3644 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,94,880 ஆகும். மேலும், 22164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  ஒரே நாளில் 71797 பேருக்கும், மொத்தமாக 97 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Yuvaraj V
  First published: