தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு கதவுகளில் நோட்டீஸ்

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு கதவுகளில் நோட்டீஸ்
  • Share this:
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் இருந்து தமிழகம் வந்தவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு 8 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதில் தமிழகத்தில் இதுவரை சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 3000 பேர் இல்லத்தில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மற்றவர்கள் கொரோனா வைரஸ் நோயிலிருந்து விலகி இருப்பதற்காக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் இந்த நோட்டீஸ்கள் வடிவமைக்கப்பட்டு வீட்டின் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சுய தனிமைபடுத்துதலுக்கு தயாராகுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்